தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் மீனவர்களை 25ஆம் தேதி வரை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jan 11, 2021, 8:22 PM IST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை வரும் 25 ஆம் தேதிவரை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rameswaram fishermen isolation till 25th
Rameswaram fishermen isolation till 25th

ராமநாதபுரம்:கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கு பிறகு, இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், மீனவர்களை காணொலி மூலம், ஊர் காவல்துறை நீதிமன்ற நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை வரும் 25ஆம் தேதிவரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தனிநேரம் ஒதுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details