தமிழ்நாடு

tamil nadu

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்!

By

Published : Jul 11, 2021, 7:17 PM IST

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 1,200 கிலோ மஞ்சளை மெரைன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Seize Turmeric in ramanadhapuram
Seize Turmeric in ramanadhapuram

ராமநாதபுரம் : மண்டபம் கடல் பகுதியில் கடத்தல் நடைபெறுவதாக மெரைன் (கடலோர காவல் குழுமம்) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று (ஜூலை.10) பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த மெரைன் காவல் துறையினர் படகில் ரோந்து சென்றனர்.

அப்போது மண்டபம் வேதாளை அருகே நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தனர். அப்போது அப்படகில் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்துவற்காக 34 மூட்டைகளில் 1,200 கிலோ சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள்

இதையடுத்து, நாட்டுப் படகையும், மஞ்சளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் மஞ்சள் கடத்தியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details