தமிழ்நாடு

tamil nadu

''நாச்சியப்பன் பாத்திரக்கடைல பார்த்ததா சொன்னாங்க..'' - போலிக் கோப்பையுடன் ஏமாற்றியவர் மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 27, 2023, 3:59 PM IST

போலிக் கோப்பை உடன் வீல் சேர் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பையில் வென்றதாக, முதலமைச்சர் வரை சந்தித்து வாழ்த்து பெற்றவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

’நாச்சியப்பன் பாத்திரக்கடைல பார்த்ததா சொன்னாங்க..’ - போலி கோப்பை உடன் முதலமைச்சர் வரை ஏமாற்றியவர் மீது வழக்குப் பதிவு
’நாச்சியப்பன் பாத்திரக்கடைல பார்த்ததா சொன்னாங்க..’ - போலி கோப்பை உடன் முதலமைச்சர் வரை ஏமாற்றியவர் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம், கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். இந்த நிலையில் இவர் கோப்பைகள் மற்றும் சான்றுகளை வைத்துக் கொண்டு, தான் வெளிநாடுகளில் சென்று போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக, கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதாகவும், அதில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வாங்கி வந்ததாகவும் கூறி உள்ளார்.

அது மட்டுமல்லாமல், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி, பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்து கோப்பை உடன் வாழ்த்து பெற்றுள்ளார்.

ஆனால், கோப்பை மற்றும் சான்றுகள் அனைத்தும் போலி என்பதை அறிந்த உண்மையான வீல் சேர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அவரால் ஏமாற்றப்பட்ட பலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஏப்ரல் 26) புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 27) அதிகாலை வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் (406 மற்றும் 420) மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மேலும், இதுவரை இவர் மீது இரண்டு சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் இரண்டு பேர் என நான்கு புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமித்ஷாவுடனான ஈபிஎஸ் சந்திப்பு; அண்ணாமலை பங்கேற்பு; பின்னணி என்ன..?

ABOUT THE AUTHOR

...view details