தமிழ்நாடு

tamil nadu

நகைக்காக வயதான மூதாட்டி கொலை!

By

Published : Apr 30, 2021, 10:19 PM IST

ராமநாதபுரம்: மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே தென்னந்தோப்பில் மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகளை பறித்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). இவர் தனது தென்னந்தோப்பில் உழவுத் தொழில் செய்து கொண்டிருந்தார்.

ஆனால், அவர் இன்று (ஏப். 30) சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது மோட்டார் அறையில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். கழுத்து, காதில் அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடல் உடற்கூராய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

சம்பவ இடத்தில் பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், தடவியல் காவலர்கள் விசாரணை செய்தனர். மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தென்னந்தோப்பில் பட்டப்பகலில் மூதாட்டியை கொலைசெய்து தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details