தமிழ்நாடு

tamil nadu

போலீசை கண்டு பயந்து ஓடியவர் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

By

Published : Aug 4, 2021, 3:10 PM IST

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை போட்டியை தடுக்கச் சென்ற காவல் துறையினரைக் கண்டு பயந்து ஓடியவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

போலீசை கண்டு பயந்து ஓடியவர் உயிரிழப்பு
போலீசை கண்டு பயந்து ஓடியவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: கடலாடி ஆ.புனவாசல் கண்மாய் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட, காலில் கத்தி கட்டிய சேவல் சண்டை போட்டி நடத்தியதாக கடலாடி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர். அப்போது காவல் துறையினரின் வருகையை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்.

அதில், ஆ.பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவர் தப்பி ஓடும் வழியிலேயே கீழே விழுந்து உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

இதனையறிந்த ஜோதிநாதனின் உறவினர்கள், காவல் துறையினர் விரட்டியதன் காரணமாக தான் அவர் உயிரிழந்ததாக கூறி கடலாடி காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அலுவலர்கள், பொதுமக்களிடம் நடந்தவற்றை கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details