தமிழ்நாடு

tamil nadu

‘ஆதரவற்றவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’

By

Published : Sep 16, 2019, 8:56 AM IST

ராமநாதபுரம்: ‘ஆதரவற்றவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ’இன்னர் வீல் கிளப் ஆப் ராமநாடு’ அமைப்பினர் கார் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

inner wheel club women car rally

ராமநாதபுரத்தில் செயல்பட்டுவரும் ’இன்னர் வீல் கிளப் ஆப் ராமநாடு’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள், மாவட்டத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் ‘ஆதரவற்றவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களின் கார் பேரணி

சென்ற மாதம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போட்டிகள் இந்த கிளப் சார்பில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதிகளுக்கு கார் மூலம் சென்று ’முதியோரைக் காப்போம்’ என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்த பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Intro:இராமநாதபுரம்
செப்.15
அநாதைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண்கள் தனுஷ்கோடி வரையில் விழிப்புணர்வு கார் பயணம் மேற்கொண்டனர்.


Body:ராமநாதபுரத்தில் செயல்பட்டுவரும் இன்னர் வீல் கிளப் ஆப் ராமநாடு என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் மாவட்டத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த மாதத்திற்கான தலைப்பாக அனாதைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பை
எடுத்துள்ளனர்.



இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை
ஏற்படுத்தி உள்ளனர்.

இன்று ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதிகளுக்கு கார் மூலம் சென்று துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்தப் பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேட்டி
கவிதா செந்தில்
இன்னர் வீல் கிளப் ஆப் ராமநாதபுரம் தலைவர்.


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details