தமிழ்நாடு

tamil nadu

தனுஷ்கோடியில் இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி ஆய்வு

By

Published : Jul 22, 2021, 11:11 PM IST

தனுஷ்கோடி - அரிச்சல்முனை பகுதியில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். இதனால் மீனவர்கள், சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

கடற்படை
கடற்படை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி - அரிச்சல்முனை பகுதியில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை அவர் பார்வையிட்டார்.

பின்னர் இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து, ஹெலிகாப்டரில் சென்று, கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். இலங்கை, சீனா இடையே நட்புறவு வலுத்து வரும் நிலையில், பாதுகாப்பு அதிகரிப்பது குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் ஆய்வு குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், மூன்று மணி நேரமாக சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் தனுஷ்கோடிக்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மீனவ பெண்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் பலனில்லாமல், ஐந்து கி.மீட்டர் நடந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க:திருப்பதி வருமானம்- வெளிநாட்டு கரன்சிகள் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details