தமிழ்நாடு

tamil nadu

இரண்டு வாரங்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்

By

Published : Aug 2, 2020, 8:35 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 3) கடலில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நாளை மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்
இரண்டு வாரங்களுக்கு பிறகு நாளை மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு சென்று வருவது வழக்கம்.

ஆனால், டீசல் விலை ஏற்றம், இலங்கை கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி மீன்வளத்துறை வழக்குப் பதிவு செய்து, சிறிய விசைப்படகுகளை பறிமுதல் செய்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவ சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று மீனவர்களுக்கு புதிய கார்ட்டுகளை பயன்படுத்தி மானிய விலையில் டீசல் பெற்றுக் கொள்ளலாம் என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், ராமேஸ்வர விசைப்படகு மீனவர்கள் இரண்டு வார இடைவெளிக்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 3) வழக்கம் போல மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details