தமிழ்நாடு

tamil nadu

பரமக்குடி அருகே தாய், மகனை தாக்கிய மூவர் மீது வழக்குப்பதிவு!

By

Published : Jul 4, 2021, 7:13 PM IST

பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் தாய், மகனை தாக்கிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் வடிவேல், நாகமுத்து. இவர்கள் இருவருக்குள்ளும் நில பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 4) நாகமுத்து தரப்பினர், வடிவேல், அவரது தாயார் சாவித்திரி ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி, கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட நாகமுத்து, பஞ்சவர்ணம், கோபால் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வட்டிக்குப் பணம் தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details