தமிழ்நாடு

tamil nadu

'கீழடி உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்'

By

Published : Sep 14, 2021, 10:15 AM IST

கீழடி அகழாய்வு மூலம் உண்மைகள் வெளிவந்து விடக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணமாக இருப்பதாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

bjp-govt-not-ready-face-keeladi-truths-says-karthik-chidambaram-mp
'கீழடி உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்'

ராமநாதபுரம்: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி இல்ல திருமண நிகழ்வில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கீழடியில் நடந்துவரும் அகழாய்வுகள் மூலம் உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்.

காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச கச்சா எண்ணெய் மதிப்பு 100 டாலராக இருந்தது. தற்போது, 74 டாலாராக இருக்கிறது. இருப்பினும், ஒன்றிய அரசு வரிவிதிப்பு மூலமாக பெட்ரோலிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து பெரும் சீரழிவை உண்டாக்குகிறது.

பொருளாதாரம் வீழ்ச்சி

இந்த வரிவிதிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்குத்தான் வருவாய் செல்லும். பணமதிப்பிழப்பின் மூலம் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

'கீழடி உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்'

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு பல கோடி ரூபாயை ஒன்றிய அரசு இன்னும் வழங்காமல் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் போன்றோரை சேர்க்கவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்

மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது. ஆனால், சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காணமுடியும்" என்றார்.

இதையும் படிங்க:”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”

ABOUT THE AUTHOR

...view details