தமிழ்நாடு

tamil nadu

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி: 120 வீரர்கள் பங்கேற்பு!

By

Published : Feb 3, 2021, 3:12 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி நடைபெற்றது. இதில், 120 வீரர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட அளவில் நடந்த இறகுப்பந்து போட்டி
மாவட்ட அளவில் நடந்த இறகுப்பந்து போட்டி

ராமநாதபுரம் மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சப்ஜூனியர், ஜூனியர் பிரிவுகளுக்கான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகத்தின் செயலாளர் பிரபாகரன், துணைத் தலைவர் வழக்கறிஞர் அசோக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, சாயல்குடி ஆகிய பகுதிகளிலிருந்து 120 வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 10, 13, 15, 17 வயது பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக நடைபெற்றது. 10 வயது ஆண்கள் பிரிவில் கௌதம் என்ற வீரரும், 13,15, 17 வயது பெண்கள் பிரிவில் சமீரா பானு என்ற வீராங்கணையும் முதல் இடம் பெற்றனர்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், இறகு பந்து கழகத்தின் மூத்தத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கரன், இணைச் செயலாளர் வள்ளல் காளிதாஸ் ஆகியோர் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.

இதையும் படிங்க: செஞ்சியில் ஆணழகன் போட்டி: ஆர்வமாக கண்டுகளித்த இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details