தமிழ்நாடு

tamil nadu

தேவர் ஜெயந்திக்காக 10ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு - ஏடிஜிபி ஜெயந்த் முரளி தகவல்

By

Published : Oct 20, 2019, 11:08 PM IST

Updated : Oct 21, 2019, 9:45 PM IST

ராமநாதபுரம்: தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 10ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தவுள்ளதாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.

devar jeyanthi

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழாவும், 57ஆவது குருபூஜை விழாவும் குறிப்பிட்ட சமூக மக்களால் கொண்டாடப்படுகிறது. குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதனையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) ஜெயந்த் முரளி, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பத்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பசும்பொன் கிராமத்தில் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் மக்கள் கூட்டம் கண்காணிக்கப்படும்.

‘பேஸ் டிராக் மொபைல் ஆஃப்’ மூலம் ஏற்கனவே உள்ள குற்றவாளிகள் கூட்டத்திற்குள் வந்தால் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
அக்.20

பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பில் 10,000 போலீஸார் ஈடுபட உள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி
ஜெயந்த் முரளி தகவல்Body:இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழாவும் 57-வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது.தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி, பசும்பொன்னில் தேவர் நினைவிடம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேவர் குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரத்தில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பசும்பொன் கிராமத்தில் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் மக்கள் கூட்டம் கண்காணிக்கப்படும். மேலும் ‘பேஸ் டிராக் மொபைல் ஆப்’ மூலம் ஏற்கனவே உள்ள குற்றவாளிகள் கூட்டத்திற்குள் வந்தால் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

.
Conclusion:
Last Updated : Oct 21, 2019, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details