தமிழ்நாடு

tamil nadu

பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது!

By

Published : Feb 2, 2021, 8:22 AM IST

ராமநாதபுரம்: தனியார் திருமண தகவல் மையத்தில் பணிபுரியும் பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அந்நிறுவனத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது
பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது

ராமநாதபுரம் மாவட்ட நகர்ப் பகுதியில் தனியார் திருமண தகவல் மையத்தில் பெண் ஒருவர் பணிபுரிந்துவருகிறார். அந்நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் என்பவர் அப்பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் முத்துப்பாண்டி தனியார் திருமண தகவல் மையத்தின் உரிமையாளர் வினோத்தை பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினார்.

இதையும் படிங்க:நவீன தெர்மோ ஸ்கேனரால் சிக்கிய பலே திருடி!

ABOUT THE AUTHOR

...view details