தமிழ்நாடு

tamil nadu

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறப்பு: 71 லட்சம் ரூபாய் காணிக்கை

By

Published : Feb 18, 2021, 2:17 PM IST

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கையாக 71 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 71.10 லட்சம் காணிக்கை
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 71.10 லட்சம் காணிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் மாதந்தோறும் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அப்போது ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி, உபக்கோயிலான கோதண்டம் ராமர் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில்களின் உண்டில்களும் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோயில் ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்ற உண்டியல் திறப்பு பணியில் கோயில் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு காணிக்கை என்னும் பணியை கணக்கிட்டனர்.

அதில் ரொக்கமாக 71 லட்சத்து 10 ஆயிரத்து 691 ரூபாயும், 77 கிராம் தங்கம், 1065 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.

இதையும் படிங்க: இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details