தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரத்தில் கரை திரும்பாத ஆறு மீனவர்கள்: தேடும் பணிகள் தீவிரம்

By

Published : Jul 15, 2021, 6:54 PM IST

ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மீனவர்கள்
மீனவர்கள்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 552 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் செந்தூரான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செந்தூரான், நம்பு, வேலுச்சாமி, மணி, முத்தரசு, செந்தில் ஆகிய ஆறு மீனவர்கள் முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆனால் தற்போது வரை இந்த ஆறு மீனவர்களும் கரை திரும்பவில்லை. இது குறித்து சக மீனவர்கள் மீன்வளத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் ஆறு மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் தேடி மீனவர்கள் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஆறு மீனவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதியினரை ஒட்டுமொத்தமாக கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:'சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளர்' - சீதாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details