தமிழ்நாடு

tamil nadu

சாயல்குடி அருகே பூட்டிய வீடுகளில் 100 சவரன் நகை கொள்ளை!

By

Published : Jul 18, 2019, 11:07 AM IST

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே பூட்டிய இரண்டு வீடுகளில் 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்ப இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த அரியமூர்த்தி என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சாயல்குடி இருவேலி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினர் அனைவரும் நேற்று வெளியே சென்றனர். அதன்பின், வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், சாயல்குடி விவிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஜெயசீலன் வீட்டிலும், 40 பவுன் நகை, 2 லட்சம் ரூபாம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்தும், சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாயல்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகபாய் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

தகவலறிந்த கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் சம்பவ இடம் விரைந்து, கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர். சாயல்குடியில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details