தமிழ்நாடு

tamil nadu

வேட்பாளரை மாற்றக்கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Mar 17, 2021, 10:00 AM IST

புதுக்கோட்டை: ஆலங்குடி அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர் தர்ம தங்கவேலை மாற்றக் கோரி, முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளரை மாற்றக் கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
வேட்பாளரை மாற்றக் கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச்.16) காலை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி வேட்பாளர் தர்ம தங்கவேலை ஆதரித்து பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பனங்குளம் எனுமிடத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை வேட்பாளர் தர்ம தங்கவேலை மாற்றக்கோரி அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

வேட்பாளரை மாற்றக்கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

அப்போது முதலமைச்சரின் வாகனம் அங்கு நிற்காமல் சென்ற நிலையில், தொண்டர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இது குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில், “காங்கிரசிலிருந்து விலகி நாற்பது நாள்களே ஆன ஒரு நபரை ஆலங்குடி அதிமுக சட்டப்பேரவை வேட்பாளராக அறிவித்திருப்பது, இந்தப் பகுதியில் அதிமுகவின் வெற்றியை முற்றிலுமாக பாதிக்கும். அதன் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” எனத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றியதை அடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் மேலும் 867 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details