தமிழ்நாடு

tamil nadu

குவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்டு தருமாறு உறவினர்கள் கோரிக்கை

By

Published : Nov 1, 2022, 12:04 PM IST

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் ஒருவர் குவைத்தில் விபத்தில் இறந்ததையடுத்து, அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharatகுவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை
Etv Bharatகுவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை : கறம்பக்குடி அருகே துவாரில் உள்ள ஆண்டிகுளப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக குவைத் நாட்டிற்கு சென்று பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார், தீபிகா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் மீண்டும் குவைத் நாட்டிற்கு பணிக்கு சென்றுள்ளார். இவருக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் செந்தில்குமார் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு பின்னர் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்றைய முன் தினம் குவைத் நாட்டில் இருந்து இவரது குடும்பத்தை தொடர்பு கொண்ட குவைத் நாட்டில் உள்ள நபர்கள் கடந்த 25ம் தேதி செந்தில்குமாருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் மேலும் அவர் மூளை சாவு அடைந்து சுயநினைவு இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் நேற்று முன் தினம் (அக்-30)நள்ளிரவில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமாரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று(அக்-31) கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவியை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிருபர் கைது

ABOUT THE AUTHOR

...view details