தமிழ்நாடு

tamil nadu

மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் மறியல்

By

Published : Jan 21, 2021, 1:27 PM IST

Updated : Jan 21, 2021, 1:40 PM IST

புதுக்கோட்டை: இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர்களின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Roadblock demanding surrender of fishermen's bodies to relatives
Roadblock demanding surrender of fishermen's bodies to relatives

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து ஜனவரி 18ஆம் தேதி 214 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய சேசு (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மெசியா (30) உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடலுக்குச் சென்ற மீனவர்களில் 213 விசைப் படகுகள் கரை திரும்பிய நிலையில், ஆரோக்கிய சேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்ற நான்கு பேரும் கரை திரும்பவில்லை. இது குறித்து சக மீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கிய சேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், படகு கடலுக்குள் மூழ்கி நான்கு பேரும் இறந்துவிட்டதாக தெரிய வந்தது.

மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் மறியல்

இதனிடையே இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த நான்கு மீனவர்களின் மெசியா, செந்தில்குமார் இரண்டு பேரின் உடல்கள் நேற்று (ஜனவரி 20) மீட்கப்பட்டன. மீதமுள்ள இருவரது உடல்களையும் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : Jan 21, 2021, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details