தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சிறப்பானது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Jul 1, 2020, 6:54 PM IST

புதுக்கோட்டை: மாவட்ட மருத்துவக் கல்லூரியில் இருக்கும் உபசரிப்பு, தூய்மை, மருத்துவத்தின் தன்மை, இருப்பிட வசதி ஆகியவற்றை வேறு எங்கும் கண்டதில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர்
காவல் கண்காணிப்பாளர்

ஆண்டுதோறும் மருத்துவர்கள் தினம் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களுக்கு நற்சான்றிதழும், கேடயமும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம், அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், "தற்போது கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனா வைரஸ் உடன் மருத்துவர்களும், மக்களும் போராடி வருகின்றனர். இதில் மருத்துவர்களின் பணி மகத்தானது. நானும் ஒரு மருத்துவர் என்பதில் பெருமை அடைகிறேன்.

புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நான் எதுவாக இருந்தாலும் வருவேன். இங்குள்ள உபசரிப்பு, தூய்மை, மருத்துவத்தின் தன்மை, இருப்பிட வசதி ஆகியவை வேறு எங்கும் நான் பார்த்தது கிடையாது. மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் திறமை வாய்ந்தவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த நாளில் அனைவரையும் வாழ்த்தி மகிழ்வதில் பெருமிதம் அடைகிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details