தமிழ்நாடு

tamil nadu

சாலையில் கிடந்த செல்போன்: காவல் துறையில் ஒப்படைத்த சிறுவன்!

By

Published : Jul 9, 2021, 9:13 PM IST

சாலையில் கிடந்த 18 அயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை மீட்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

smartphone
ஸ்மார்ட்போன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ. நகர் சாலையில் நேற்றிரவு( ஜூலை 8) 8.30 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் தனது மகன் பிரகாஷ்ராஜூடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் செல்போன் கிடப்பதை அச்சிறுவன் பாரத்துள்ளான். உடனடியாக பைக்கிலிருந்து இறங்கி எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போனை உடையாமல் மீட்டுள்ளான்.

தொடர்ந்து, செல்போனை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக பொன்னமராவதி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் தனபாலனிடம் நேரடியாக வழங்கியுள்ளான்.

நான்காம் வகுப்பு மட்டுமே படிக்கும் பிரகாஷ்ராஜின் இச்செயலை கண்டு வியந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன், காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை வெகுவாக பாராட்டினர்.

மேலும், ஒப்படைக்கப்பட்ட செல்போன் அதன் உரிமையாளர் நெற்குப்பை அரசுப் பள்ளியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த செல்போனின் மதிப்பு சுமார் 18 ஆயிரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்பினரும் சிறுவனை பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details