தமிழ்நாடு

tamil nadu

"தமிழக காங்கிரஸின் தலைவராக தான் நினைப்பது பேராசை" - சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 9:46 AM IST

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும் என்பது எனது ஆசை, தமிழக காங்கிரஸின் தலைவராக வேண்டும் என்பது தனது பேராசை என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்
கார்த்தி சிதம்பரம்

எம்பி கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை:தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஆருடம் தான். எனவே, 5 மாநில இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திருக்கட்டளையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஆருடம் தான். எனவே, 5 மாநில இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும். ராஜிவ் காந்தியை கொன்றது கொடூரமான செயல். ராஜிவ்காந்தியை கொன்றவர்களை ஒருபோதும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எல்.டி.டியை ஆதரித்து, தான் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. ஆசை பேராசை இரண்டுமே எனக்கு உண்டு. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக போட்டியிடவும் ஆசை உள்ளது, தமிழக காங்கிரன் தலைவராக பொறுப்பேற்க பேராசையும் உள்ளது.

சென்னை மழை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதி அளித்த அவர், கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் மழை நீர் செல்வதற்கு முறையான வாய்க்கால்கள் இல்லை. இனி வரும் காலங்களிலாவது செகண்டரி ஸ்டோரேஜ் முறையை அரசு அறிமுகப்படுத்தி அதற்கு உண்டான வேலைகளை செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளாக பாஜகவோடு, அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு, சில காலங்களாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கூறுகின்றனர். சிறுபான்மையினர் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். எனவே, சிறுபான்மையினரின் வாக்கு காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இங்கிருந்து எந்த கட்சியின் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் திட்டங்களை முடக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத் தீா்ப்பு புரியாவிட்டால், அவா் மூத்த வழக்குரைஞரை சந்தித்து விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம். அமைச்சர்களில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு மட்டும் உண்டு” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவல் துறையில் சங்கம் அமைக்க வலியுறுத்தி வீடியோ வெளியிட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு!

ABOUT THE AUTHOR

...view details