தமிழ்நாடு

tamil nadu

சொத்துத் தகராறு: தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு மரண தண்டனை

By

Published : Oct 1, 2021, 10:23 PM IST

புதுக்கோட்டையில் சொத்துத் தகராறு காரணமாகத் தனது தாயை வெட்டி, தலையைத் துண்டாக்கிய மகனுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற தீர்ப்பளித்தது.

தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை
தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை

புதுக்கோட்டை:மழையூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி திலகராணி. இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்துவந்த நிலையில் 2010ஆம் ஆண்டு தங்கராஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தங்கராஜை அவரது மனைவி திலகராணி கொலை செய்துவிட்டதாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர். ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் திலகராணி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் திலகராணிக்கும் அவரது மூத்த மகன் ஆனந்திற்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்துள்ளது.

மரண தண்டனை விதித்த நீதிபதி

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி திலகராணியை ஆனந்த் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டாக்கி கையில் எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.

இதையடுத்து, மழையூர் காவல் துறையினர் ஆனந்தை கைதுசெய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் இன்று (அக். 1) நீதிபதி சத்யா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்துப் பிரச்சினைக்காகத் தனது தாயைக் கொலை செய்த ஆனந்திற்கு மரண தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை

ABOUT THE AUTHOR

...view details