தமிழ்நாடு

tamil nadu

குடும்ப பிரச்னை காரணமாக கார் ஓட்டுநர் தற்கொலை

By

Published : Mar 8, 2021, 10:28 PM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்னை காரணமாக கார் ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

suicide
suicide

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் சங்கிலி முருகன் (40). கார் ஓட்டுநராக பணியற்றி வந்த இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்துள்ள நரசனங்கண்மாய் பகுதியைச் சேர்ந்த கற்பகவள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக சங்கிலி முருகன் நரசனகண்மாய் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொன்னமரவாதி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சங்கில் முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வலையப்பட்டி, பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details