தமிழ்நாடு

tamil nadu

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

By

Published : Oct 21, 2020, 9:33 PM IST

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே 800 லிட்டர் சாராய ஊறலை அழித்த காவல் துறையினர், இது தொடர்பாக இருவரை தேடி வருகின்றனர்.

800 liters of alcohol destroyed by police
கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது அறிவுரைப்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செரினா பேகம் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பல்வேறு விவசாய பகுதிகளில் ஆய்வுசெய்த போது கருக்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த வெங்கிடு, கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த வீரமுத்து ஆகிய இருவரும் 800 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.

காவல் துறையினரின் வருகையை அறிந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, 4 பேரல்களிலிருந்த 800 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கீழே ஊற்றி அழித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details