தமிழ்நாடு

tamil nadu

அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு: போலீசார் விசாரணை!

By

Published : Jun 4, 2020, 5:24 PM IST

பெரம்பலூர்: நகர்ப்புறப் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருட்டு
திருட்டு

பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான கல்யாண நகர் என்ற இடத்தில், கார்த்திக் என்பவருடைய உணவகத்தில் கல்லாபெட்டியில் வைத்திருந்த, ரூபாய் பத்தாயிரம் பணமும்; அதேபோல் அருகிலுள்ள அறிவழகன் என்பவரது உணவகத்தில் ரூபாய் 800 பணமும்; மேலும் பக்கத்திலுள்ள துணிக்கடையில் பூட்டை மட்டும் உடைத்து, கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் அறிந்து பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நகர்ப்புற பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரத்தடை ஏற்பட்டு வருவதாகவும்; இதனை சாதகமாக்கி கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details