தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூரில் 37 மதுபானக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்; மதுப்பிரியர்கள் வேண்டுகோள்!

By

Published : Apr 2, 2023, 11:01 AM IST

Updated : Apr 2, 2023, 2:38 PM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, காலி மதுபான பாட்டில்கள் நீர் நிலைகள் மற்றும் சாலைகளில் வீசி எறிவதை தடுக்கும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் ஒத்திகைத் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 மதுபானக் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Tasmac introduces liquor bottle buy and return scheme in Perambalur
மதுபான கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப் பெரும் திட்டத்தை அனைத்து கடைகளிலும் அமல்படுத்த மதுப்பிரியர்கள் வேண்டுகோள்

பெரம்பலூரில் 37 மதுபானக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்; மதுப்பிரியர்கள் வேண்டுகோள்!

பெரம்பலூர்:அரசு மதுபானக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 மதுபான கடைகளிலும் நேற்று (ஏப்.1) முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 37 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் விளை நிலங்கள், பொது இடங்கள், நீர் நிலைகள் மற்றும் சாலைகளில் போடப்படுகின்றன.

எனவே, இதனைத் தடுக்கும் பொருட்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் ஒத்திகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்த மதுபானப் பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 கொடுத்து மதுபானத்தைப் பெற்று, பின்னர் அதே கடையில் மீண்டும் காலி பாட்டிலை ஒப்படைத்து கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 மதுபானக் கடைகளிலும் ரூ.10 கூடுதலாக பெற்றுக்கொண்டு மதுபானங்களை விற்பனை செய்வதோடு, காலி பாட்டில்களை மீண்டும் திரும்பப்பெற்றுக் கொண்டு ரூ.10 திரும்ப கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள், தங்களுக்கு இந்த திட்டம் வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் போதியப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறும்போது சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுவதாகவும், காலி பாட்டில்களை சேமித்து வைப்பதற்காக தனி இடங்கள் வேண்டும் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், மதுப்பிரியர்கள் கூடுதலாக பத்து ரூபாய் கொடுத்து, மதுபானங்களை பெறும் திட்டம், தாங்கள் திரும்ப காலி பாட்டிலை அளிக்கும்போது அனைத்து மதுபானக்கடைகளிலும் திரும்பப்பெற வேண்டுமென மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:‘எழுத்தின் மூலம் மதவெறியை தூண்டக்கூடாது’ - நிர்மலா சீதாராமன்!

Last Updated : Apr 2, 2023, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details