தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் - காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு டிஜிபி

By

Published : Nov 12, 2020, 8:28 PM IST

பெரம்பலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தை ஆய்வு செய்த சிறப்பு காவல் துறை இயக்குநர் ராஜேஸ் தாஸ், காவலர்கள் பொதுமக்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

மரக்கன்று நட்ட சிறப்பு காவல் துறை இயக்குநர்
மரக்கன்று நட்ட சிறப்பு காவல் துறை இயக்குநர்

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு இன்று (நவ.12) வருகை தந்த சிறப்பு காவல் துறை இயக்குனர் ராஜேஷ் தாஸ், அலுவலகத்தை ஆய்வு செய்து, காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்களிடையே கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டுபவர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அதேநேரத்தில், மக்களிடம் அன்பாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

பின்னர், காவல் துறை சிறப்பு இயக்குனர் ராஜேஸ் தாஸ் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் இணைந்து, மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இந்த ஆய்வின்போது, திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் H.M ஜெயராம், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் - கல்வியாளர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details