தமிழ்நாடு

tamil nadu

வாட்டர் கேன்களில் பறவைகளுக்கு உணவும், நீரும்.. பெரம்பலூரில் காவலர்களின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

By

Published : Apr 22, 2023, 10:49 PM IST

கோடை காலத்தில் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவியின் ஆலோசனையில் வைக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் நிறைந்த வாட்டர் கேன்களை நோக்கி பல பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

பெரம்பலூர்:பெரம்பலூரில் கோடை காலத்தில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, வாட்டர் கேன்களை மரங்களில் கட்டி, அவைகளில் உணவு மற்றும் தண்ணீரை நிரப்பி ஏராளமான பறவைகளின் பசியையும் தாகத்தையும் தணித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் மாவட்ட கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி பிற காவலர்களை ஒன்றிணைத்து அப்பகுதியிலுள்ள மரங்களில் இவ்வாறு காலியான வாட்டர் கேன்களை சேகரித்து அவற்றில் தண்ணீரையும், கம்பு, அரிசி உள்ளிட்ட தானியங்களையும் வைத்து பறவைகளின் பசியை போக்கி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகாரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், மனிதர்கள் கோடை வெப்பத்திலிந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழங்கள் உட்கொள்வது குளிர்பானங்கள் அருந்துவது போன்ற பல்வேறு முறையில் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பறவை இனங்களோ, கோடை வெயிலின் தாக்கத்தினை தணித்துக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் வளாகத்தில் சுமார் 100 மரங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.

மேற்படி, கோடைக்காலத்தின் கோரப்பிடியில் இருந்து பறவையினங்களை காக்க வேண்டும் என்பதற்காக, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் பறவைகள் எளிதில் அமர்ந்து தண்ணீர் குடிக்கவும் தானியங்களை உண்ணவும் 28 மரங்களில் தண்ணீர் பாட்டில்களையும் 14 மரங்களில் தானிய உணவுகளையும் வைத்துள்ளனர்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அதன் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் கோடை வெயிலில் தண்ணீர் குடிக்கவும் தானியங்கள் உண்ணவும் வழிவகை செய்துமாறு அறிவுறுத்தினார்.

அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்று பறவையினங்களுக்கு வாட்டர் கேன்களை அமைத்து உணவு மற்றும் தண்ணீரை அளித்தால் கோடைக்காலத்தில் மட்டுமில்லாமல், பிற காலங்களிலும் அவற்றை அழியாமல் பாதுகாக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க:Etv Bharat: இசைக் கருவிகள் வேண்டாம் குரல் ஒன்றே போதும்.. குரல் இசையில் கலக்கும் தஞ்சை 'பாலமுருகன்'

ABOUT THE AUTHOR

...view details