தமிழ்நாடு

tamil nadu

மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 70 சதவீத இலக்கினை இன்று எட்டிவிடுவோம்- மா. சுப்பிரமணியன்

By

Published : Oct 23, 2021, 2:25 PM IST

மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் நிலையில் 70 சதவீத இலக்கினை இன்று அடைந்துவிடுவோம் எனத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி முகாம்
கரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் :மாவட்டத்தில் 6ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமினை பெரம்பலூர் துறைமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலப்படப் பொருள்கள், சுத்தமான பொருள்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து, உபரியாக வீணாகிப் போகும் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு வழங்கும் விழிப்புணர்வு வாகனத்தையும் தொடங்கிவைத்தார்.

சுகாதார பெட்டகம் வழங்கிய அமைச்சர்

68 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து 6ஆவது தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள முகாம்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அகில இந்திய அளவில் 71 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், 31 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் உள்ளார்கள்.

கரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை 68 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 26 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 70 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரவித்துள்ளது.

அந்தவகையில் 70 சதவீத இலக்கினை இன்று அடைந்து விடுவோம் என்று நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசி முகாம்
இதையும் படிங்க : திருவள்ளூரில் பிரமாண்ட சைக்கிள் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details