தமிழ்நாடு

tamil nadu

மண் சரிந்து கல்குவாரி தொழிலாளி பலி

By

Published : Mar 12, 2020, 4:31 PM IST

பெரம்பலூர்: கல் குவாரியில் மண் சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

dead
dead

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் குவாரியில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மலை என்பவர் வேலை செய்து வருகிறார்.

உயிரிழந்த செம்மலை

இந்நிலையில், இன்று (மார்ச் 12) மதியம் செம்மலை கல்குவாரியில் மண் வெட்டிக்கொண்டிருக்கையில் திடீரென மண் சரிந்தது. அதில் அவர் மீது விழுந்து சிக்கிக்கொண்டர். இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் உடனே செம்மலையை மண் சரிவிலி மீட்டனர். பலத்த காயமடைந்த செம்மலையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details