தமிழ்நாடு

tamil nadu

ஆட்சியரை மாற்றக்கோரி குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா!

By

Published : Aug 19, 2019, 3:06 PM IST

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களை மாற்றக்கோரி மாற்றுத்திறனாளி மனுதாரர் குறைதீர் கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர் மனு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால். இவர் திருமாந்துரை பகுதியில் கழிவுநீர் தொட்டியை சீர்செய்யக் கோரியும் சில அடிப்படை பிரச்னைகளுக்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர் மனு

ஆனால், இந்த மனு தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களை மாற்றக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

மனு வாங்க மறுக்கப்பட்டதால், குறைதீர் கூட்டம் நடைபெறும் இடத்திலேயே இக்பால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றக் கோரி மாற்றுத் திறனாளி மனுதாரர் குறைதீர் கூட்டத்தில் தர்ணா


Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துரை கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால் இவர் திருமாந்துரை பகுதியில் கழிவுநீர் தொட்டியை சீர் செய்ய கோருதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தார் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை மாற்றக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார் மனுவை வாங்க மறுத்ததால் குறைதீர் கூட்டம் நடைபெறும் இடத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது


Conclusion:மாவட்ட ஆட்சியர் மாற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மனு கொடுக்கப்பட்டது சிறிது நேரம் பரபரப்பு உண்டாகியது பேட்டி முகமது இக்பால் மாற்றுத்திறனாளி மனுதாரர் திருமாந்துரை

ABOUT THE AUTHOR

...view details