தமிழ்நாடு

tamil nadu

லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

By

Published : Feb 6, 2021, 11:05 AM IST

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு
லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரிய வடகரை காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி தீபமலர். இருவரும் நேற்று (பிப். 5) வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தங்களது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணாபுரம் - வெண்பாவூருக்கு இடையே சென்றபோது அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தீபமலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீபமலரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி அருகே இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details