தமிழ்நாடு

tamil nadu

சொந்த ஊர் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கும் மலேசிய தொழிலதிபர்; வெளிநாடு போல ஜொலிக்க போகும் பூலாம்பாடி கிராமம்...

By

Published : Apr 10, 2023, 9:27 PM IST

பெரம்பலூர் அருகே தனது சொந்த கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ 2 கோடி நிதி வழங்கினார் மலேசிய தொழிலதிபர்.

சொந்த ஊர் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கும் மலேசிய தொழிலதிபர்
சொந்த ஊர் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கும் மலேசிய தொழிலதிபர்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனது சொந்த கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ 2 கோடி நிதி வழங்கிய மலேசிய தொழிலதிபர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தைச் சார்ந்த பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. பூலாம்பாடி கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியள்ளது. பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது. இதனையடுத்து பூலாம்பாடியை சேர்ந்த மலேசியநாட்டு தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பூலாம்பாடி பேரூராட்சியின் அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறும் வகையில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டு, இதில் டத்தோ பிரகதீஸ்குமாரின் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.13 கோடி பங்களிப்பு தொகையைத் தர உறுதியளித்துள்ளார்.

இதற்காக முதற்கட்டமாக பிரகதீஸ்குமார் முதல்தவனையான தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.90 லட்சமும், இரண்டாவது கட்டமாக 74 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது கட்ட தொகையாக 26 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்காண டிடியை பேரூராட்சி செயலாளர்கள் சிவராமனிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொழிலதிபர் பிரகதீஷ்குமார் தெரிவிக்கையில், ”நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தனது பங்களிப்பும் அரசு பங்களிப்புடன் சேர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பணிகள் முடிவுற்றும் உள்ளது. இதில் தற்போது வரை 2 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் மேற்கு மாயானம் அருகில் தடுப்பு சுவர் அமைத்தல், கட்டப்பகுட்டை நீர் வெளியேறும் வடிகால் அமைத்தல், மேலசீனிவாசபுரம் முதல் வெள்ளைபாறை வரை அருவி சாலையில் இரண்டு சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது” என தெரிவித்தவர்.

மேலும் இதற்கு உறுதுணையாக உள்ள தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பூலாம்பாடி கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் கூட எடுக்கவில்லை: ஓஎன்ஜிசி மாறன் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details