தமிழ்நாடு

tamil nadu

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்குச் சிறை!

By

Published : Feb 6, 2021, 10:13 AM IST

பெரம்பலூர்: மூளை வளர்ச்சி குன்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 54 வயதுடைய நபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் 24 வயதுடைய இளம்பெண் மூளை வளர்ச்சி குன்றியவர்.

இந்நிலையில் மூளை வளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் தாயார் வெளியே சென்றிருந்த நிலையில் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய சுப்ரமணியன் என்பவர் அப்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுப்ரமணியனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விஷம் கொடுத்து சிறுமி கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details