தமிழ்நாடு

tamil nadu

600 காளைகள், 500 காளையர்கள்: களைகட்டிய குமாரபாளையம்!

By

Published : Jan 25, 2020, 6:36 PM IST

நாமக்கல்: குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன்  ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டினை தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

KUMARAPALAIYAM JALLIKATTU
குமாரப்பாளையம் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர்.

காளையை அடக்க முயற்சிக்கும் காளையர்கள்

போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்குப் போட்டி வளாகத்தில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மையத்தில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர்கள் தங்கக் காசு, பீரோ, கட்டில், பாத்திரங்கள், சைக்கிள் போன்ற பரிசுப் பொருள்களை வழங்கினர்.

களைகட்டிய குமாரபாளையம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப் போட்டியினைக் காண அம்மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, மற்ற மாவட்டங்களிலிருந்தும் மக்கள் குவிந்தனர். போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்கை கைவிடுக’ - தமிழ்நாடு அரசிற்கு முகிலன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details