தமிழ்நாடு

tamil nadu

முட்டையின் விற்பனை சரிவு: விலை நிர்ணயம் குறைப்பு

By

Published : Sep 26, 2020, 10:10 AM IST

நாமக்கல்: புரட்டாசி மாதத்தில் முட்டையின் விற்பனை சரிந்ததையடுத்து 15 காசுகள் சரிந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை
முட்டை

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளில் இருந்து 15 காசுகள் குறைத்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 நாட்களில் 80 காசுகள் உயர்ந்து 3 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளில் இருந்து ஒரே நாளில் 15 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் அசைவ பிரியர்கள் சைவ உணவிற்கு அதிகளவு மாறியதால் முட்டைகள் தொடர்ந்து அதிகளவு தேக்கம் அடைத்துள்ளது.

இதனால் விற்பனை குறைந்து விலை குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதிக விலை காரணமாகவும் முட்டை விற்பனை கடுமையாக குறைந்து முட்டை நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details