தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் அமோக வெற்றி பெற்ற திமுக

By

Published : Feb 23, 2022, 10:50 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக 4 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றியது.

namakkal-urban-local-body-election
namakkal-urban-local-body-election

நாமக்கல்மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக விளங்கும் நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ள நிலையில் 22, 25 வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 37 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 29ஆவது வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற, மீதமுள்ள 36 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

திமுக கூட்டணி அமோக வெற்றி

நாமக்கல் நகராட்சியில் இந்த வெற்றி இதுவரை பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ள நிலையில் 1,10 வார்டுகளில் அதிமுகவும், 10ஆவது வார்டில் சுயேட்சை வெற்றி பெற மீதமுள்ள 24 வார்டுகளை திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்ற, அதிமுக 8 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற, பாஜக ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 21 வார்டுகளில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இந்த நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது.

இழுபறியாக உள்ள குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற, அதிமுக 10 இடங்களில் வெற்றி பெற, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 9 பேர் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளனர். இதில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் இழுபறியே நீடித்து வருகிறது.

அதிமுக வெற்றி

அதே போல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, எருமைபட்டி, பரமத்தி, பொத்தனூர், வேலூர், பாண்டமங்கலம், நாமகிரிபேட்டை, சீராபள்ளி, ஆர்.புதுப்பட்டி, ஆர்.பட்டணம், பிள்ளாநல்லூர், அத்தனூர், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், ஆலம்பாளையம், படைவீடு ஆகிய 18 பேரூராட்சிகளிலும் அறுதி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது.

வெங்கரை பேரூராட்சியை மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 இடங்களையும், திமுக 7 இடங்களையும் வென்றுள்ளது.

இதையும் படிங்க : ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து பெற்ற வெற்றிதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details