தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல் மலைக்கோட்டை கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

By

Published : Dec 25, 2020, 2:17 PM IST

நாமக்கல்: நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

நாமக்கல் மலைக் கோட்டை கோயிலில்  வைகுண்ட ஏகாதசி ஒட்டி  சொர்க்க வாசல் திறப்பு
நாமக்கல் மலைக் கோட்டை கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி சொர்க்க வாசல் திறப்பு

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் இந்தக் குடவறை கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று (டிச. 25) அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாகக் கூடையில் வைத்து ஜடாரியை கொண்டுவந்தனர்.

சொர்க்க வாசல் திறப்பு

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி, சாமி தரிசனம்செய்தனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகச் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டாலும், இணையத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் காலை 6 மணி முதல் தகுந்த இடைவெளியுடன் சாமியைத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாமக்கல் மலைக்கோட்டை கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

இருந்த போதிலும் பக்தர்கள் நாமக்கல் கடைவீதியிலிருந்து பேருந்து நிலையம் வழியாகப் பூங்கா சாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் 500 காவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி


இதையும் படிங்க :ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு - ரத்தின அங்கியில் நம்பெருமாள்

ABOUT THE AUTHOR

...view details