தமிழ்நாடு

tamil nadu

’உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதே பெருமை’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jan 29, 2023, 7:45 AM IST

உங்கள் செல்ல பிள்ளையாக, உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து நான் பணியாற்றுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டம்பொம்மைகுட்டை மேட்டில் 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 351.11 கோடி ரூபாய் மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், ரூ.23.70 கோடி மதிப்பிலான 60 முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 28) நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அப்போது அமைச்சர் உதயநிதி, "அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநாடு போன்று நடந்து கொண்டிருக்கிறது.

கடுமையாக உழைக்க கூடிய மக்கள் நாமக்கல் மக்கள். பல்வேறு தொழில்களால் ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வரிகளை கட்டும் மக்கள் நாமக்கல் மக்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் 216 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடி மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் 1,86,706 பயனாளிகள் மக்களை தேடி மருத்துவத்தில் பயனடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

அதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 88 கோடி ரூபாய் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் உழைப்பால் உயர்ந்து, சுற்றுலா துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார். அவரது உழைப்பிற்காக தற்போது அவருக்கு வனத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையும் அவர் செம்மையாக செய்து வருகிறார். இது அனைவருக்குமான அரசு. திராவிட மாடல் அரசு. மக்களுக்காக உழைக்கின்ற அரசு.

18 மாதத்தில் பல்வேறு சாதனைகளை திராவிட மாடல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். கலைஞர் பேரன், இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சரின் மகன் என்று பல்வேறு பெருமைகள் எனக்கு இருந்தாலும், உங்கள் செல்ல பிள்ளையாக, உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து நான் பணியாற்றுவேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் - வேலூரில் தொடங்கும் முதல் ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details