தமிழ்நாடு

tamil nadu

முட்டை விலை உயர்வு: கோழிப் பண்னை உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

By

Published : Apr 12, 2021, 3:09 PM IST

நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை விலை 15 காசுகள் உயர்வு
முட்டை விலை 15 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப்.12) தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, 15 காசுகள் உயர்ந்து, 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முட்டை விலை உயர்வு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, கோடை வெயிலின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 15 விழுக்காடுவரை சரிவடைந்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு, கேரளாவில் முட்டையின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் முட்டை கொள்முதல் விலை 75 காசுகள் உயர்ந்திருப்பதால், பண்ணையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: முட்டை வண்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details