தமிழ்நாடு

tamil nadu

கோடை வெப்பத்தால் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு: முட்டை விலை உயர வாய்ப்பு

By

Published : Apr 13, 2021, 8:03 PM IST

நாமக்கல்: கோழிப் பண்ணைகளில் கடும் வெப்பம் காரணமாக 15 லட்சம் கோழிகள் உயிரிழந்ததால், முட்டை விலை உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடை வெப்பத்தால் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு
கோடை வெப்பத்தால் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரியாக 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கும், மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கடந்த மார்ச் 29ஆம் தேதி ஒரு முட்டை விலை ரூ.3.90 காசாக இருந்தது. அதன் பின்னர், தொடர்ந்து உயர்த்தப்பட்டு தற்போது ரூ.4.60 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோடை வெப்பம் காரணமாக பண்ணைகளில் சுமார் 15 லட்சம் கோழிகள் உயிரிழந்தன.

அதேசமயம் கோழித்தீவன மூலப்பொருளான சோயா புண்ணாக்கு, ஒரு கிலோ ரூ.35 என இருந்தது.

இது தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இதனால் புதிய குஞ்சுகளை பண்ணைகளில் விடுவதும் குறைந்துள்ளது. இதன் காரணமாக வரும் வாரங்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை: அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்!

ABOUT THE AUTHOR

...view details