தமிழ்நாடு

tamil nadu

முட்டை விலை 20 காசுகள் சரிவு

By

Published : Jun 17, 2021, 12:18 PM IST

தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக முட்டை விலை 20 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை விலை
முட்டை விலை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்துவருகிறது.

நேற்றைய நிலவரப்படி, முட்டை விலையானது ரூ.5.20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஜுன் 17) முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.5ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் பேசுகையில், “தமிழ்நாடு, கேரளாவில் முட்டையின் தேவை குறைந்துள்ளது. அதேபோல் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் முட்டை விலை குறையக்கூடும்” என்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 குறைவு

ABOUT THE AUTHOR

...view details