தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் சரிந்த முட்டை விலை!

By

Published : Mar 4, 2021, 9:48 AM IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை, ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை சரிவு  நாமக்கல் முட்டை விலை  முட்டை விலை  Egg Price  Namakkal Egg Price  Egg Price decreased In Namakka
Namakkal Egg Price

நாமக்கல்லில் இன்று (மார்ச்4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் (மார்ச்4) 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, வட மாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டதால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்னணையாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நாமக்கலில் முட்டை விலை குறைவு!

ABOUT THE AUTHOR

...view details