தமிழ்நாடு

tamil nadu

பறவைக்காய்ச்சல் எதிரொலி: சரியத் தொடங்கிய முட்டை விலை!

By

Published : Jan 7, 2021, 10:14 AM IST

Updated : Jan 7, 2021, 10:50 AM IST

நாமக்கல்: பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளில் இருந்து ஒரே நாளில் 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை  நாமக்கல் முட்டை விலை  பறவைக்காய்ச்சல்  Echoes of bird flu egg prices plummeted in a single day  bird flu  egg price
Namakkal Egg Price

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்

கடந்த வாரங்களில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த முட்டை விலை, கடந்த வாரம் 5 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரளா, வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனால், வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு வெகுவாக குறைந்து முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

முட்டை விலை

இதையடுத்து, விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளில் இருந்து ஒரே நாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வரும் நாள்களில் முட்டை விற்பனை, இருப்பை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மீண்டும் உயர்ந்த முட்டை விலை!

Last Updated :Jan 7, 2021, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details