தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர்!

By

Published : Mar 23, 2021, 4:23 PM IST

நாமக்கல்: நாமக்கல் அடுத்துள்ள பொட்டணம் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குச்சேகரித்தார்‌.

அதிமுக பாஸ்கர்
அதிமுக பாஸ்கர்

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் அடுத்துள்ள பொட்டணம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வாக்கு சேகரித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் பாஸ்கருக்கு ஆரத்தி எடுத்த பாட்டி
இருச்சக்கர வாகனத்தில் சென்று வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளர்
இதனையடுத்து அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அப்பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வெற்றிப் பெற்றவுடன் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details