தமிழ்நாடு

tamil nadu

இளைஞர் உயிரிழப்பு குறித்து காவலர்கள் விசாரணை!

By

Published : Oct 25, 2021, 7:58 AM IST

தரங்கம்பாடி அருகே தனியார் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிந்து வந்த இளைஞரின் சந்தேகத்துகுரிய உயிரிழப்பு தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்
மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில், ஐயப்பன் ஹோட்டல் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை, வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (22), இரண்டு மாதங்களாக சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு முதல் அரவிந்தனை காணவில்லை என அவரது குடும்பத்தினருக்கு, அங்கு வேலை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அரவிந்தனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்றிரவு (அக்.24) ஐயப்பன் கேட்டரிங் சர்வீஸ் அலுவலக மாடியில் துர்நாற்றம் வீசுவதாக அங்கு வேலை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா?

இந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அங்கு அரவிந்தன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகில் காலி விஷ மருந்து பாட்டில்கள் கிடந்தன. அரவிந்தன் உயிரிழந்த தகவல் அறிந்து 300க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

விஷ மருந்து பாட்டில்கள்

மேலும் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறைத் தலைவர் வசந்தராஜ், செம்பனார்கோயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தின் உரிமையாளர் அன்பழகனை கைது செய்ய வேண்டும் என்று அரவிந்தனின் உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரவிந்தனின் உடலை வீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், சர்வீஸ் அலுவலகத்தின் உரிமையாளர் அன்பழகன் உள்ளிட்ட 12 பேரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வைர, தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details