தமிழ்நாடு

tamil nadu

குடும்ப பிரச்சனை- பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

By

Published : Dec 23, 2020, 7:14 AM IST

மயிலாடுதுறை: ஹாஜியார் பகுதியில் கணவன் துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவுடையம்மாள்
ஆவுடையம்மாள்

மயிலாடுதுறை மாவட்டம், ஹாஜியார் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (37). இவருக்கும், சங்கரன்கோவில் கோமதியாபுரத்தைச் சேர்ந்த ஆவுடையம்மாள் (32) என்பவருக்கும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு, 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்தநிலையில் மாதவன் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தனது மனைவியைச் சந்தேகப்பட்டுத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல், நேற்று முன்தினம்(டிச.21) கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த ஆவுடையம்மாள் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள்!

அவரின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று தீயை அனைத்து ஆவுடையம்மாளை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆவுடையம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தன் கணவர் தன்னை சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்தியதால் தான் தீவைத்துக் கொண்டதாக, நீதிபதி அப்துல்ஹனியிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஆவுடையம்மாளின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல்துறையினர் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக, மாதவன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details