தமிழ்நாடு

tamil nadu

தேர்தலை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுகின்றன - எம். அப்துல் ரஹ்மான்

By

Published : Nov 19, 2021, 3:13 PM IST

பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எம். அப்துல் ரஹ்மான்
செய்தியாளர்களைச் சந்தித்த எம். அப்துல் ரஹ்மான்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இந்திய முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆட்சிதான் சிறந்த ஆட்சி. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே மு.க. ஸ்டாலின் அளித்த பிரதான வாக்குறுதியில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

நீட் சட்டமும் திருப்பப்பெறப்பட வேண்டும்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே இன்றைக்கு வேளாண் சட்டம் வாபஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த எம். அப்துல் ரஹ்மான்

அறிவிப்போடு நின்றுவிடாமல் இச்சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும். பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுகிறது.

இதைப்போலவே நீட் சட்டமும் திருப்பப்பெறப்பட வேண்டும், அப்போதுதான் மக்களிடம் ஒன்றிய அரசுக்கு எதிரான அதிருப்தி நீங்கும்” என்றார்.

இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details