தமிழ்நாடு

tamil nadu

சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் "டெஸ்லா" நிறுவனத்தின் லோகோவை வரைந்த இளைஞர்

By

Published : May 12, 2022, 8:01 AM IST

சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் "டெஸ்லா" நிறுவனத்தின் லோகோவை வரைந்து அசத்திய மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெஸ்லா நிறுவனம் பதிவேற்றம் செய்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் "டெஸ்லா" நிறுவனத்தின் லோகோவை வரைந்த இளைஞர்
சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் "டெஸ்லா" நிறுவனத்தின் லோகோவை வரைந்த இளைஞர்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் விக்னேஷ். இந்தியாவிலேயே முதன்முதலாக சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களை வரைந்து புகழ் பெற்றவர்.

சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் இவர் வரைந்த ஓவியங்களை தனது இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பிரபலமடைந்து வருபவர்.

இந்நிலையில், உலகில் பிரபலமான எலக்ட்ரிக் கார் நிறுவனமான "டெஸ்லா", உலகில் காற்றுமாசை குறைக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை தயாரித்து முன்னனியில் உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் லோகோவை சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் விக்னேஷ் வரைந்த ஓவியத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனைபார்த்த டெஸ்லா நிறுவனம் விக்னேஷின் திறமையை கண்டு வியந்து டெஸ்லா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வீடியோவை அந்நிறுவனம் பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ பல லட்சம் லைக்குகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்" எலான் மஸ்க் பகீர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details